இந்த டாப் லிஸ்ட் தான் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள்.! நம்ம விக்ரமுக்கு எந்த இடம் தெரியுமா.?

பொதுவாக சினிமாவில் ஒரு படம் வெளியாகிறது என்றால் மக்கள் அனைவரும் அந்த படங்கள் பற்றிய விவரங்களுக்காக படத்தின் பெயரை கூகுளில் தேடுவார்கள். இதனை கூகுள் எத்தனை முறை ஒரு படத்தை பற்றி தேடுகிறார்கள் என்பதை பதிவு செய்து வருடம் வருடம் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியிடும்.

அந்த வகையில், இந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் லிஸ்டை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் ரன்பீர் கபூர், அலியா பட் ஆகியோர் நடிப்பில் வெளியான “பிரம்மாஸ்திரம்”  திரைப்படம் உள்ளது.

இரண்டாவது இடத்தில் வசூலில் ஒரு கலக்கு கலக்கிய “கேஜிஎப் 2” திரைப்படம் இருக்கிறது. இதனை தொடர்ந்து 7-வது இடத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வசூலில் தமிழ் சினிமாவை மேய் சிலிர்க்க வைத்த தமிழ் திரைப்படமான “விக்ரம்” திரைப்படம் உள்ளது. அதற்கு முன்பு  ஆர்ஆர்ஆர், காந்தாரா, புஷ்பா ஆகிய படங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்: 

1) பிரம்மாஸ்திரம்
2) கேஜிஎப் 2
3) காஷ்மீர் பைல்ஸ்
4) ஆர்ஆர்ஆர்
5) காந்தாரா
6) புஷ்பா 
7) விக்ரம்
8) லால் சிங் சத்தா
9) த்ரிஷ்யம் 2
10) தோற: லவ் அண்ட் தண்டர்

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment