இந்திய சந்தையில் விலையுயர்ந்த மின்சார கார் இதுதான்! வியக்கவைக்கும் சிறப்பம்சங்கள்

இந்திய சந்தையில் ஏராளமான கார்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் விற்பனைக்கு வருகின்றன. எரிவாயுவால் இயங்கும் கார்களை போலவே மின்சார கார்களும் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இவ்வகை கார்களில் பல கார்கள் விலைமதிப்புமிக்க கார்களாகும்.

அதில் மிக அதிக விலையில் விற்பனையாகும் மின்சார காராக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் உள்ளது. விலையுயர்ந்த கார்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள இந்த காரில் அசத்தலான சிறப்பம்சங்கள் பல இடம்பெற்றுள்ளன. இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 7.5 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெக்டர் மாடலில் இடம்பெற்றுள்ள 102kWh பேட்டரி பேக், 585 hp மற்றும் 900 Nm ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 530 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். மணிக்கு 100 கிலோ மீட்டர் என்னும் வேகத்தை வெறும் 5 விநாடிகளில் எட்டுகிறது ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர்..!

Leave a Comment