டெங்குவை ஒழிக்க ட்ரோன்கள் மூலம் கொசு ஒழிப்பு – அமைச்சர் சுப்பிரமணியன்

போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னையில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டார்கள். இது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி டெங்குவை ஒழிக்க ட்ரோன்கள் மூலம் நீர்நிலைகளில் மருந்துகளை தெளிப்பது, கொசுமருந்து அடிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் அவர் கூறுகையில், போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது குறித்து விளக்கமளித்தார். இதுகுறித்து அவர்  கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் போரூர் ஏரியை மூட முயற்சி நடந்தது. ஸ்டாலின் நடத்திய போராட்டத்தால் தான் தற்போது போரூர் ஏரி இருக்கிறது. அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர், ஓ.பன்னீர் செல்வம் என தெரிவித்தார். மேலும், போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.