பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இன்று வருகை….!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார்.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது. தேர்தல் பணிகள் மற்றும் அதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் மேற்கொண்டு வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளுமே தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார். இவர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி  வைக்கின்ற நிலையில், தேர்தல் பரப்புரையும் மேற்கொள்ளவுள்ளார். இதனால் பிரதமர் நரேந்திர மோடி வருகை தரும் அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.