இந்தியாவில் ஊடுருவ நினைத்த சீன ராணுவத்திற்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது – பிரதமர் மோடி

இந்திய நிலத்தைப்  பார்த்த சீன ராணுவத்திற்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

லடாக் எல்லைப் பிரச்சனை  குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மோடி, நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தின் மீது கூட யாரும் கண் வைக்க முடியாத வகையில் நமது பலம் உள்ளது.

இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை. நாட்டை பாதுகாப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது என  கூறினார். மேலும் அவர் கூறுகையில் இந்திய நிலத்தைப் பார்க்கத் துணிந்தவர்களுக்கு இந்த வீரர்கள் சரியான பாடம் கற்பித்ததாக கூறினார். சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய எல்லைகளை யாரும் கைப்பற்றவும் இல்லை என்று கூறினார்

ஒரே சமயத்தில் பல முனைக்களுக்கு செல்லக் கூடிய திறன் நாட்டின் ஆயுதப் படைகளுக்கு உள்ளது.முப்படைக்கு  தேவையான போர் விமானங்கள், நவீன ஹெலிகாப்டர்கள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் ஆகியவை வாங்கப்பட்டுள்ளன என்று அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.நாட்டைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் இந்திய ஆயுதப்படைகள் செய்து வருவதாக பிரதமர் கட்சித் தலைவர்களுக்கு உறுதியளித்தார்.  .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.