UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு!

UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு.

கடந்த 2019-ம் ஆண்டுக்கான ஆட்சிப்பணி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், இதற்கான  நேர்முக தேர்வுகள் பிப்ரவரி தொடங்கி ஏப்ரல் வரை நடக்கவிருந்து. அடர்க்குள் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்ததால், இந்த தேர்வுகள் ஒத்திவைப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூலை இறுதியில் நேர்முகத் தேர்வும் முடிந்தது. இந்நிலையில் ஆட்சிப் பணி தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மொத்தம் 829 பேர் தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்த தேர்வில் வெற்றியடைந்த மாணவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தந்து ட்வீட்டர் பக்கத்தில், ‘ UPSC  தேர்வில் வெற்றியடைந்த தமிழக மாணவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்! கணேஷ்குமார் பாஸ்கர், ஐஸ்வர்யாவின் சிறப்பிடங்களும் மாற்றுத்திறனாளிகள் பூர்ணசுந்தரி, பால நாகேந்திரன் வெற்றியும் மகிழ்ச்சிக்குரியது! வாய்ப்பு கிட்டாதவர்கள் சோர்ந்துவிடாமல் உறுதியுடன் முயற்சியுங்கள்!’ என பதிவிட்டுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.