MIvsDC : அனல் பறக்கும் மும்பை அணியின் பந்துகள்..! திணறிய டெல்லி கேபிடல்ஸ்..இதுவே இலக்கு…!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 131 ரன்கள் குவித்துள்ளது.

மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் மற்றும் மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, டெல்லி கேபிடல்ஸ் அணியின் மெக் லானிங் மற்றும் ஷஃபாலி வர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

delhi cap

ஷஃபாலி வர்மா, வோங் வீசிய பந்தில் மெலி கெர்ரின் கேட்ச் ஆட்டமிழந்தார். மும்பை அணியின் இஸ்ஸி வோங் மற்றும் ஹேலி மேத்யூஸ் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இறுதியில் ராதா யாதவ் மற்றும் ஷிகா பாண்டே இருவரும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்துள்ளது.

MIvsDC 12

டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக மெக் லானிங் 35 ரன்களும், ஷிகா பாண்டே 27* ரன்களும், ராதா யாதவ் 27* ரன்களும் குவித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் இஸ்ஸி வோங் மற்றும் ஹேலி மேத்யூஸ் தலா 3 விக்கெட்டுகளையும், மெலி கெர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 132 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment