ராமர் கோயில் பேரணி…13 பேர் கைது ..!

அயோத்தியில் ராமர் கோயில்  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மும்பையை ஒட்டியுள்ள மீரா பயந்தர் பகுதியில் வாகனப் பேரணிக்கு சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10:30 மணியளவில் மீரா நகர் பகுதியில் வாகனப் பேரணியின் போது இரு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மீரா நகர் பகுதியில் அயோத்தி ராமர் கோயில்  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  கார்களிலும் ,  மோட்டார் சைக்கிள்களிலும் ஏராளமானோர்  ராமரைப் புகழ்ந்து கோஷங்களை எழுப்பி கொண்டும், சிலர் பட்டாசுகளை வெடித்துக்கொண்டு  சென்றனர்.

அதிமுகவில் இணைந்த திமுக சேர்மேன்..!

அப்போது, அந்த பகுதிகளில் வசித்தவர்கள் சிலர் வீடுகளை விட்டு வெளியே வந்து பேரணியில் ஈடுபட்டவர்களையும்,  அவர்களின் வாகனங்களையும் தாக்கினர் என்று  போலீஸ் தரப்பில்  கூறினார். இந்த மோதலின் போது போலீசார்  விரைவாகத் தலையிட்டு மோதல் ஏற்படாமல் தடுத்ததாகவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், மேலும் பதற்றம் ஏற்படாமல் தடுக்கவும் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது என போலீஸ் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த சம்பவத்தின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து, மீரா சாலையில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உத்தரவின் பேரில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் அடையாளம் கண்டு கைது செய்ய சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

author avatar
murugan