வீட்டை விட்டு வெளியேற மாட்டேன்… உரலி மூலம் உறுதிமொழி வாங்கி சான்றிதழ் வழங்கும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய முயற்சி…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை 979 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் 25 பேர் பலியாகி உள்ளனர். இன்று மாலைக்குள்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1000ஐ கடக்கும் என்று  மருத்துவர்களால் கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த கொரோனாவின் வேகத்தை கட்டுப்படுத்த இந்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்க அரசால் அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பு கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக இந்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகள் சுவரொட்டிகள், ஒலிபெருக்கி மூலம், தண்டோரா, விளம்பரங்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதனை மேலும் வலுப்படுத்த மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் புதிய முயற்சியாக ஒரு உறுதிமொழியை எடுக்கும் விதமாக ஒரு உரலியை அறிமுகம் செய்துள்ளது. 

Ministry of Electronics and Information Technology - MEITY ...

அந்த உரலியானது https://pledge.mygov.in /stayahome/ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உரலியை தொட்டு உள்ளே சென்ற உடன் நமது தகவல்களை பதிவு செய்து 21 நாட்கள் வீட்டில் இருந்து சமுக இடைவெளியை கடைபிடிப்பேன் என்று உறுதி ஏற்று அதற்க்கு சான்றாய் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் ஒரு சான்றிதலும் அளிக்கப்படுகிறது. இந்த செயல் அனைவரையும் டிஜிட்டல் முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என சமுக வலைதள வாசிகள் கருதுகின்றனர். என்றாலும் அரசின் இந்த புதிய முயற்சி மக்களை சமுக இடைவெளியை கடைபிடிக்கும் என கருதுகின்றனர்.

author avatar
Kaliraj