கடலூரில் அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து.! அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு.!

கடலூர், விருதாச்சலத்தில் அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார். 

கடலூர் மாவட்டம் விருத்தசலத்தை நோக்கி ஓர் அரசு பேருந்து இன்று வந்து கொண்டிருக்கையில், கோமங்கலம் அருகே , சாலையில் ஒரு நெய் அறுவடை எந்திர வாகனம் வந்த போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது.

பேருந்து கவிழ்ந்ததில் பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மூலம் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு பயணிகள் மீட்கப்பட்டனர். இதுவரை 60 பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment