தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது..! சபாநாயகரை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள்..!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத் தொடரில் 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும் என்றும்,  தமிழ்நாடு அரசின் சார்பில் புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இன்றைய சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் சபாநயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று, இன்று கூடும் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய பேரவை தலைவரிடம் வலியுறுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து தற்போது, சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகருடன் அதிமுக எம்எல்ஏக்கள், எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.