விடுமுறைக்கு முன்னர் பள்ளிகள் திறக்கக்கூடாது! – அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

  • அமைச்சர் செங்கோட்டையன் கோபி ஊராட்சி ஒன்றியத்தில் வாக்களித்தார். 
  • பிறகு பேசிய அவர், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான தேர்தலில் ஜனவரி 3ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்தார்.  

உள்ளாட்சி தேர்தல் தற்போது முதல் கட்டமாக தீவிர வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. மொத்தம் 27 மாவட்டங்களில் 156 ஒன்றியத்தின் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தலில் உயர் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையத்தில் வாக்களித்து விட்டு பின்னர், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி பள்ளிகள்தான் திறக்கப்படும். அதற்கு முன்னர்திறக்கப்பட கூடாது. திறக்கப்படும் போது 3 பருவ புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.’ எனவும் தெரிவித்தார்

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.