உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி? முழு வீச்சில் தயாராகும் அறை!

மிக விரைவில் அமைச்சராக பொறுபேறாகி உள்ளார் சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலின்.

தமிழக அரசின் அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவில் டிசம்பர் 14-ஆம் தேதி மாற்றம் மேற்கொள்ள முதலமைச்சர் முடிவு செய்திருப்பதாகவும், இதில் புதியவர்களுக்கு பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அமைச்சரவை மாற்றத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதால், சென்னை தலைமைச் செயலகத்தில் முழு வீச்சில் அவருக்கான அறை தயாராகி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் மிக விரைவில் அமைச்சராக பொறுபேறாகி உள்ளார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தாக கூறப்பட்டது. மேலும், மூத்த அமைச்சர்களின் துறைகளை மாற்றம் செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment