,
manothangaraj

பால் விநியோகம் செய்யும் இடங்களில் நேரடியாக ஆய்வு செய்த அமைச்சர் மனோ தங்கராஜ்!

By

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

சென்னையில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வந்தாலும், பல இடங்களில் மக்கள் உணவு, பால், தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் சில இடங்களில் மக்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஓய்வின்றி உழைப்பு… விரைவில் நிலைமை சீரடையும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

இந்த நிலையில், வெள்ள பாதிப்பால் பால் விநியோகிப்பதில் சிரமம் நீடித்து வரும் நிலையில், ஆவின் நிலையங்களில் மக்கள் வரிசையில் நின்று பால் வாங்கி வருகின்றனர். மீண்டும் பால் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்ற அச்சத்தில், மக்கள் கூடுதலாக பால் வாங்கி செல்கின்றனர்.

சில இடங்களில் பால் கூடுதல் விலைக்கு விற்படுவதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், ஆவின் பால் விநியோகம் செய்யும் இடங்களில் நேரடியாக ஆய்வு செய்துள்ளார். மேலும், கள்ள சந்தையில் பாலை விற்பனை செய்யும் பால் முகவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Dinasuvadu Media @2023