எந்த கொம்பனாலும், தமிழ்நாட்டில் சிறு பதற்றத்தை கூட உருவாக்க முடியாது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு.!

எந்த கொம்பன் நினைத்தாலும், தமிழ்நாட்டில் சிறு பதற்றத்தை கூட ஏற்படுத்தி விட முடியாது. – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு. 

அண்மையில் தமிழ்கத்தில் வடமாநில தொழிலாளர்கள் இங்குள்ளவர்களால் தாக்கப்படுவதாக பொய்யான வந்தந்திகள் பரவியதை அடுத்து, வடமாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர் திரும்பினர்.

அரசு நடவடிக்கை : இந்த சம்பவங்களை அடுத்து தமிழக அரசும், காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து, இது வெறும் வதந்தி, அவ்வாறு வதந்தி பரப்புவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும் , வடமாநில தொழிலாளர்கள் உரிய பாதுகாப்புடன் இருக்கிறார்கள் எனவும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ள்ளது எனவும் அரசு உறுதிப்படுத்தி வருகிறது .

மு.க.ஸ்டாலின் உதவி : இந்நிலையில், நேற்று சென்னையில் ஒரு நிகழ்வில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என நினைப்பவர். வெளிமாநில தொழிலாளர்கள் ஒருவேளை கூட பட்டினியாக இருந்து விட கூடாது என தனியார் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டு இருந்த சுமார் 600 தொழிலாளர்கள் உணவு வழங்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். என குறிப்பிட்டார் .

பயண செலவு : மேலும், ஒரு சமயத்தில். யாரெல்லாம் சொந்த ஊருக்கு செல்ல , முற்பட்டார்களோ, அவர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்டது . அப்போது அதற்கான பயண செலவை தமிழக அரசே ஏற்கும் வண்ணம் உத்தரவிட்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் பதற்றம் : அடுத்ததாக, வடநாட்டு தலைவர்களை எல்லாம் நமது முதல்வர் ஒன்றிணைதுள்ளார். அதனை கண்டு பொறாமை எண்ணத்தில் சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். எந்த கொம்பன் நினைத்தாலும், தமிழ்நாட்டில் சிறு பதற்றத்தை கூட ஏற்படுத்தி விட முடியாது. இன்றைக்கு எல்லாருமே. தமிழகத்தில் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள் என வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து பேசினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment