ரேஷன் கடைகளில் உளுந்து வழங்காததற்கு காரணம் மத்திய அரசா ?

மத்திய அரசு மானியம் ரத்தால் ரேஷன் கடைகளில் உளுந்து வழங்க இயலவில்லை என அமைச்சர்  செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார் .

இதற்குமுன்  சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ரேஷன் கடைகளில் உளுந்து வினியோகம் நிறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி, மீண்டும் உளுந்து வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கடந்த காலங்களைவிட அதிக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோகத் திட்டத்தின்கீழ் பொருள்கள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார். மத்திய அரசு மானியத்தை நிறுத்திவிட்டதாலும், விலைவாசி உயர்வாலும் தமிழகத்தில் சிறப்பு பொது விநியோக திட்டம் செயல்படுத்த ஒரு மாதத்துக்கு 207 கோடி ரூபாய் கூடுதல் செலவு அரசுக்கு ஏற்படுவதாக செல்லூர் ராஜூ விளக்கமளித்தார். இதன் காரணமாகவே, அரசால் ரேஷன் கடைகளில் உளுந்து வழங்க இயலவில்லை என அமைச்சர் தெரிவித்தார். உளுந்துக்கு பதிலாக துவரம் பருப்பு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
source: dinasuvadu.com

Leave a Comment