மினி மாரத்தான்: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி போட்டி.!

நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காவல்துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி, மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இப்போட்டியின் இறுதியில், வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிசுகள் வழங்கி, பாராட்டினார்.

இதில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. ஆண்களுக்கு 10 கிலோ மீட்டா், பெண்களுக்கு 5 கிலோ மீட்டா், சிறுவா்களுக்கு 3 கிலோ மீட்டா், முதியவா்களுக்கு 5 கிலோ மீட்டா் தூரம் என தனித்தனியாக போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெறுவா்களுக்கு பரிசுகளும், பங்கேற்பவா்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்