டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மியா கலீஃபா ட்வீட்..!

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச பிரபலங்கள் குரல் கொடுத்துவரும் நிலையில் நடிகை மியா கலீஃபா ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.

மத்திய அரசின் புதிய மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் விவசாயிகள் போராட்ட செய்திகள் சர்வதேச அளவில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன. இதைதொடர்ந்து, பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர் ஏற்படுத்திவரும் கிரிப்டோ தன்பெர்க் மற்றும் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ஆகியோர் விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் தற்போது மியா கலீஃபாவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்ட தளமான சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி எல்லையில் இணைய சேவையை உள்துறை அமைச்சகம் நிறுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகை மியா கலீஃபா தனது ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார். அதில், அவர் விவசாயிகள் இயக்கத்தின் ஒரு பகுதியாக மாறிய பெண்களைக் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, அதில் “மனித உரிமை மீறல் என்ன நடக்கிறது.? அவர்கள் புதுடெல்லியைச் சுற்றி இணைய சேவை நிறுத்திஉள்ளனர்? என பதிவிட்டுள்ளார். மியா கலீஃபாவின் இந்த ட்வீட் இப்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

author avatar
murugan