மேவலால் சவுத்ரி ராஜினாமா… அசோக் சவுத்ரிக்கு கூடுதல் பொறுப்பு..!

நேற்று  ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கல்வித் துறை அமைச்சர் மேவலால் சவுத்ரி பதவி விலகியதைத் தொடர்ந்து பீகார் கட்டிட கட்டுமான அமைச்சர் அசோக் சவுத்ரிக்கு கல்வித் துறையின் கூடுதல் பொறுப்பு நேற்று வழங்கப்பட்டது. பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பரிந்துரையின் பேரில் அசோக் சவுத்ரியை கல்வி அமைச்சராக பீகார் ஆளுநர் பாகு சவுகான் நியமித்தார்.

பீகார் முதலமைச்சராக நிதீஷ்குமார் புதிய பதவிக்காலத்தின் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் 16 ம் தேதி 14 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களில் ஒருவர் தான் மேவலால் சவுத்ரி. பாகல்பூர் மாவட்டத்தில் சபூரில் உள்ள பீகார் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மேவலால் சவுத்ரி இருந்தபோது பல முறைகேடுகள் நடந்ததாகக் கூறி 2017 ஆம் ஆண்டில், நிதீஷ்குமார் மேவாலாலை கட்சியில் இடைநீக்கம் செய்தார்.

“குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யவேண்டும் அல்லது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால்தான் ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுகிறது, என் மீது உள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க இவற்றில் எதுவும் இல்லை” என்று மேவலால் தனக்கு எதிராக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து கூறினார். பின்னர், மேவலால் மீண்டும் நிதீஷ்குமார் கட்சியில் சேர்த்து கொண்டார். இதைதொடர்ந்து தான் மேவலால் சமீபத்தில் நடைபெற்ற பீகார் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan