தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த ஒரு சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அதில் குறிப்பாக, கடலோர மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவமழைக் காலம் தொடங்கி, முதலில் சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் வெள்ளத்தை ஏற்படுத்தியது. அடுத்து நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழகத்தில் கனமழை பொலிந்துநிலையில், தற்போது டெல்டா மாவட்டங்ககனமழை பெய்து வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்து உள்ளது.

தொடர்மழை காரணமாக 10 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை ..!

நேற்று முதல் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இங்கு அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்தில் கனமழை வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 22 செமீ மழையும், திருவாரூரில் 21 செமீ மழையும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 20 செமீ மழையும் பதிவாகி இருக்கிறது. இதனிடையே, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்