தொடர் மழை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு.!

தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடரும் மழை பெய்து வருகிறது. அதன்படி அதிகாலை முதலே கிண்டி, அடையாறு, வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 36 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று, 497 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், தற்போது நீர் இருப்பு 3,132 மில்லியன் கனஅடியாக உள்ளது.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

தற்போது, நீர்வரத்து 497 கன அடியாக உள்ள நிலையில், ஏரியில் இருந்து குடிநீருக்காக 108 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக, 24 அடி உயரமுள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.5 அடியை எட்டியது. இதனால், ஏரிக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளதகா தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.