ஒரு மணிநேரம் தான் முடக்கம்… பல்லாயிரம் கோடிகளை இழந்த மெட்டா நிறுவனம்!

Meta : உலக முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கிய நிலையில், மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் 3 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் சமூகவலைதங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய  செயலிகள் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென முடங்கியது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளை பயப்படுத்திக்கொண்டிருந்தபோது, திடீரென லோக் அவுட் ஆனதும், சிலருக்கு நெட்வொர்க் சரியாக இருந்தும் அந்த செயலிகளில் புகைப்படம், வீடியோ எதுவும் காட்டாமல் முடங்கியதால் பயனர்கள் சிரமத்துக்குள்ளானார்கள்.

Read More – “மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்”.. மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்!

மெட்டா நிறுவனத்தின் செயலிகள் உலகளாவிய செயலிழப்பை எதிர்கொண்டதால், பயனர்கள் தங்கள் கணக்குகளில் உள்நுழைய முடியாமல் தவித்தனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு ஃபேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் செயலிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிகள் முடங்கியதாகவும், மக்களின் சிரமத்திற்கு வருந்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

Read More – ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் செயல்படவில்லை

இந்த நிலையில், நேற்று மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களில் ஏற்பட்ட பெரிய அளவிலான செயலிழப்பு, பில்லியன் கணக்கான பயனர்களை பாதித்த நிலையில், அந்நிறுவனம் 3 பில்லியன் டாலரை (சுமார் ரூ.23,127 கோடி) இழந்துள்ளதாக கூறப்படுகிறது.  உலக முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் சுமார் ஓரு மணிநேரம் முடங்கியதன் விளைவாக மெட்டா நிறுவனத்தின் பங்குகள் பல்லாயிரம் கோடிகளை இழந்துள்ளது.

Read More – செங்கடலில் இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஹூதி.!

அதன்படி, நேற்று பங்குச்சந்தை வர்த்தக அமர்வின் போது மெட்டாவின் பங்குகள் 1.6 சதவீதம் குறைந்து 490.22 அமெரிக்க டாலராக முடிந்தது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு நேற்று ஒரே நாளில் 2.79 பில்லியன் டாலர்கள் குறைந்த நிலையில், தற்போது 176 பில்லியன் டாலர்களாக உள்ளது. இருப்பினும், உலகின் 4வது பணக்காரர் என்ற நிலையைத் தக்க வைத்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment