கொரோனாவால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்! காரணம் என்ன?

முதலில்  கொரோனா சீனாவில் உள்ள மக்களை தான் பாதித்தது. இந்த  நோயால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மற்ற நாடுகளிலும் இந்த நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக உயிரிழந்துள்ளனர்  கூறியுள்ளனர். 

 சீனாவில் பாதிக்கப்பட்ட ஆண்களில் 2.8% பேர் உயிரிழந்துள்ளனர். பெண்களில் 1.7% பெண்களே உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பியாவிலும் உயிரிழந்தவர்களில் 70% பேர் ஆண்கள் என தெரியவந்துள்ளது. 

இதற்க்கு காரணம், பெண்களை போல் ஆண்கள்  கை கழுவும் பழக்கத்தை கடைபிடிப்பதில்லை. அவர்கள் அதிகமாக புகைபிடிக்கும் பழக்கத்தை கடைபிடிப்பதாலும், மருத்துவமனைக்கு செல்வதற்கு கால தாமாதம் செய்வதையும் காரணமாக கூறுகின்றனர்.

ஆனால், இந்த காரணங்களை தாண்டி, அபாயங்களை மேற்கொள்ள ஆண்களை விட பெண்களுக்கு அதிகமான ஆற்றல் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதற்க்கு உதாரணம் என்னவென்றால், உலகில் 100 வயதையும் தாண்டி வாழும் பெண்களில் 80% பேர் பெண்கள் தான். இதற்க்கு காரணம், பெண்களில் குரோமோஸோம்களில் தான் இவர்களின் பலம் உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

பெண்களின் குரோமோசோம்களில் இரண்டு x குரோமோசோம்கள் உள்ளன. ஆனால் ஆண்களின் குரோமோசோம்களில் ஒரு x குரோமோசோம்கள் தான்  உள்ளது.இந்த குரோமோசோம்கள் தான்,  மனிதர்களின் மூளை வளர்ச்சி பராமரிக்கிறது.  மேலும், இது தான் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கும் வேலையை செய்கிறது. 

 பெண்களிடம்  காணப்படும், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆண்களிடம் காணப்படும், டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் நோய் எதிர்ப்பு திறனை தடுக்கிறது என ஆய்வாளர்கள்  கூறியுள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.