அணை விவகாரம் – டெல்லி புறப்பட்டார் அமைச்சர் துரைமுருகன்!

மேகதாது மற்றும் மார்க்கண்டேய நதி அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசவுள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

கர்நாடகா தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டி உள்ளது தொடர்ந்து சர்ச்சையை எழுப்பி வரும் நிலையில், தமிழக விவசாயிகள் இதனால் பாதிப்படையும் அச்சம் உள்ளதால் இது குறித்து நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என தமிழக  நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள், மேகதாது அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இதனையடுத்து, இது குறித்து மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து பேசுவதற்காக தமிழக  நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் இன்று டெல்லி செல்கிறார். டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றிருந்த அமைச்சர் துரைமுருகன் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், மேகதாது அணை மற்றும் மார்க்கண்டேய நதி அணை விவகாரம் குறித்து மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal