விவசாயிகளுக்கு ஆதரவாக மீனா ஹாரிஸ் 2-வது ட்வீட்…!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் அச்சுறுத்தல் மூலம் தனது நிலைப்பாட்டினை மாற்றிவிட முடியாது என பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பல கட்ட பேச்சுவார்த்தைகள் விவசாயிகளோடு மத்திய அரசு நடத்தியும், எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

இதைத்தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர் ஏற்படுத்தி வரும் கிரிப்டோ தன்பெர்க் விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரிக்கிறேன். அச்சுறுத்தல் கண்டு பின்வாங்க மாட்டேன், அச்சுறுத்தல் மூலம் தனது நிலைப்பாட்டினை மாற்றிவிட முடியாது என தெரிவித்தார்.

இவரை தொடர்ந்து, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் இப்போதும் விவசாயிகளின் அமைதியான போராட்டத்திற்கு ஆதரவாகவே இருக்கிறேன். அச்சுறுத்தல் மூலம் தனது நிலைப்பாட்டினை மாற்றிவிட முடியாது என பதிவிட்டுள்ளார்.

 

author avatar
murugan