பனை மரத்தின் மருத்துவ பயன்கள் !

தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறைகளில்  இயற்கையாக கிடைக்கும் கள் முக்கியத்துவம்வாய்ந்ததாக உள்ளது. சித்தர்கள் கள்ளின் மருத்துவப் பயன்களை தெளிவாக பதிவு செய்து சென்றுள்ளனர்.
ஆண்களுக்கு உடல் வலிமையையும், விந்து சக்தியும் பனை மரத்து கள்ளால்   அதிகரிக்கும் என தமிழ் சித்தர் அகத்தியர் குணப்பாடம் கூறுகிறது.
பனை மரத்தின் பால் தெளுவு அல்லது தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். இந்த பாலை100-200 மி.லி. தினமும் காலையில் வெறும் வயிற்றில்  அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் தீர்ந்து விடும்.  கள் சிறிது நேரம் ஆன பிறகு கொஞ்சம் புளிப்பு சுவை உண்டாக்குகிறது. அவ்வாறு புளிப்பேறிய கள் மயக்கம் தரும். அறிவை மயக்கும் ஆனால்  உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதனை பதநீர் என்று அழைப்பர். அதைக் காய்ச்சினால் இனிப்பான கருப்பட்டி  கிடைக்கும்.
 வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அறிய மருந்து நுங்கு ஆகும்.. எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும்.  பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது.  சுட்டு சாப்பிடலாம். மிகுந்த மணம் உடையது.
பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட  கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். பணகிழங்கு நார்சத்து கொண்டது. குழந்தைகளுக்கு உடலை தேற்றும்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment