இதுவரை நீங்கள் அறிந்திராத காலிப்ளவரின் மருத்துவ பயன்கள்…!!!

காலிப்ளவர் ஒரு அழகான பூ போன்ற தோற்றமுடையது. இது பார்ப்பதற்க்கே அழகாக இருக்கும். இது நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் மிக எளிதாக கிடைக்க கூடிய காய்கறி வகைகளை சேர்ந்தது. இதில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது மட்டுமல்லாமல், நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.

சத்துக்கள் :

காலிப்ளவரில் சல்ஃ பரோபென் என்ற சத்து இதில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் உள்ளது. காலிபிளவரை மூடியிருக்கும் இலை அதிகமான கால்சியம் சத்துக்களை கொண்டது.

பயன்கள் :

  • இது நீரிழிவு நோயாளிக்கு மிக சிறந்த உணவாகும்.
  • இதனை உண்பதன் மூலம் புற்று நோய் செல்கள் கொல்லப்படுவதுடன், புற்றுநோய்கட்டியின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
  • இது நமது உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
  • சிறுநீரகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
  • மூளையை சிறப்பாக செயல்பட வைக்கிறது.
  • குழந்தைகளின் ஞாபக திறனை அதிகரிக்க செய்கிறது.
  • இது சிறந்த நஞ்சு முறிப்பானாக செயல்படுகிறது.
  • இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்த நாளங்களை பாதுகாக்கிறது.
  • வயிற்றில் உள்ள கிருமிகளை வெளியேற்றி குடல் பகுதிகளை சுத்திகரிக்கிறது.
  • பக்கவாதம், இதம் சமபந்தப்பட்ட நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment