மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்திய மக்களின் துன்பங்களை உணர்ந்த அண்ணல் காந்தியடிகள் தன் மேலாடையைத் துறந்த அரை ஆடைப் புரட்சி நாள் இன்று! மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும்!

கடந்த செப்டம்பர் 22-ந்தேதி 1921-ம் ஆண்டு, காந்தியடிகள் அரை ஆடைக்கு மாறிய  நாள். ஒரு மனிதரை மகாத்மாவாக உயர்த்திய மதுரை சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு அரசியல் பிரபலங்கள் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மதுரை மேலமாசி வீதியும் 22-9-1921-ம் இந்திய வரலாற்றின் திசையை மாற்றி எழுதியதன் நூற்றாண்டு! இந்திய மக்களின் துன்பங்களை உணர்ந்த அண்ணல் காந்தியடிகள் தன் மேலாடையைத் துறந்த அரை ஆடைப் புரட்சி நாள் இன்று! மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.