பூஜையுடன் மங்களகரமாக தொடங்கப்பட்ட “மாவீரன்”.! வைரலாகும் புகைப்படங்கள்…

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் தீபாவளி என்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21-வது படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படுவதற்கு முன்பே சிவகார்திகேயன் நடிக்கவுள்ள 22-வது படத்துக்கான டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படத்திற்கு தமிழில் “மாவீரன்” என்றும் தெலுங்கில் “மஹாவீருடு” என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை நடிகர் யோகிபாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைக்கிறார்.

படத்தின் டைட்டில் டீசரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியது என்றே கூறலாம். இந்த நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தெரிகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment