மீண்டும் இணைந்துள்ள மாற்றான் ஜோடி! இம்முறை கிராமத்து கதை களத்தில்!

நடிகர் சூர்யா தற்போது காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளது. லைகா தயாரித்துள்ள இப்படத்தை கேவி ஆனந்த் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தை அடுத்தது இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் பெரும்பாலும் நிறைவு பெற்றுவிட்டது. இப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது.

இந்த படத்தை அடுத்து ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் விஸ்வாசம் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மாற்றான் படத்துக்கு பிறகு மீண்டும் சூர்யா – காஜல் அகர்வால் ஜோடி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.