#IPL2022: வெற்றிபெறுமா ராஜஸ்தான்? பெங்களூர் அணிக்கு 145 ரன்கள் இலக்கு!

இன்று நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது. 

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – படிக்கல் களமிறங்கினார்கள்.

7 ரன்கள் அடித்து படிக்கல் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து அஸ்வின் களமிறங்கினார். சிறப்பாக ஆடத்தொடங்கிய அஸ்வின் 4 பவுண்டரிகள் விளாசி 17 ரன்கள் அடித்து வெளியேற, பின்னர் அதிரடி ஆட்டக்காரர் பட்லர் 8 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரைதொடர்ந்து சஞ்சு சாம்சன் களமிறங்க, 27 ரன்கள் எடுத்து அவரும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ரியான் பராக் களமிறங்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் தங்களின் விக்கெட்டை இழந்தார்கள்.

அதிரடியாக ஆடிய ரியான் பராக் 56 ரன்கள் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சில் சிராஜ், ஹசல்வுட், ஹஸ்ரங்கா தலா 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள்.