#MIvCSK: வெற்றிநடையை தொடருமா சென்னை?? பலம்,பலவீனம் மற்றும் உத்தேச XI!

ஐபிஎல் தொடரில் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை – சென்னை அணிகள் மோதவுள்ள நிலையில், பலம்,பலவீனம் மற்றும் உத்தேச XI குறித்த ஒரு பார்வை.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 27-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த சீசனில் சென்னை அணி, இதுவரை 6 போட்டிகள் விளையாடி, 5 போட்டிகளில் வெற்றிப்பெற்று அசுரபலத்தில் உள்ளது. அதேபோல சற்று திணறிவரும் மும்பை அணி, 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் மும்பை அணி 19 போட்டிகளிலும், சென்னை அணி 13 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போட்டிபோல இந்த போட்டி பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக இந்த போட்டியின் எதிர்பார்ப்புகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியது.

மும்பை இந்தியன்ஸ்:

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தளவில், தொடக்கத்தில் களமிறங்கும் ரோஹித் சா்மா – டி காக் சிறப்பாக ஆடி, ரன்களை குவிகின்றனர். அதனையடுத்து மிடில் ஆா்டரில் களமிறங்கும் சூா்யகுமாா் யாதவ், க்ருனல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா கூடுதல் பலம். வேகப்பந்து வீச்சில் பும்ரா, டிரென்ட் போல்ட் அதிரடியான பார்மில் இருக்கும் நிலையில், சுழற்பந்து வீச்சில் ராகுல் சாஹா் பேட்ஸ்மேன்களை நடுங்க வைப்பார்.

உத்தேச XI:

ரோஹித் சா்மா (கேப்டன்), டி காக் (கேப்டன்) , சூா்யகுமாா் யாதவ், க்ருனல் பாண்டியா, கிரண் போலாா்ட், ஹாா்திக் பாண்டியா, இஷான் கிஷன் / ஜெயந்த் யாதவ், நாதன் கூல்டர்-நைல், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் சொதப்பலான ஆட்டத்தால் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதியாக நிலையில், இந்தாண்டு பெரிய கம்பேக் கொடுத்துள்ளது. தொடக்க வீரர்களாக களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட், டூ பிளெஸிஸ் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மிடில் ஆா்டரில் ரெய்னா, மொயீன் அலி, ஜடேஜா, அம்பதி ராயுடு, தோனி சிறப்பாக ஆடிவருவதால், அதிகளவில் ரன்களை குவிப்பார்கள். அதேபோல பந்துவீச்சில் தீபக் சாஹா், ஷா்துல் தாக்கூர், இங்கிடி, சாம் கரண், சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, மொயீன் அலியின் கூட்டணி, பேட்ஸ்மேனுக்கு சவாலாக அமையும்.

உத்தேச XI:

ருதுராஜ் கெய்க்வாட், பஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சாம் கரண், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், லுங்கி இங்கிடி / இம்ரான் தாஹிர்.