சுதந்திர தின ஸ்பெஷலாக வருகிறதா மாஸ்டர் மூவி அப்டேட்.?

சுதந்திர தின ஸ்பெஷலாக வருகிறதா மாஸ்டர் மூவி அப்டேட்.?

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திலுள்ள Quit Pannuda என்ற பாடல் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தினை குறித்த அப்டேட் தான். அந்த வகையில் தற்போது மாஸ்டர் படத்தில் உள்ள "Quit Pannuda" என்ற பாடல் சென்சார் ஆகியுள்ளது. எனவே விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடலை விரைவில் மாஸ்டர் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ரசிகர்கள் இந்த பாடல் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Posts

#BREAKING: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்.. ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை..!
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை
மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒருபுறமும் , அதிமுக அரசு மறுபுறமும் விளையாடுகிறது - மு.க. ஸ்டாலின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்!
"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!
70 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஒரே ஒரு பெருமை பயங்கரவாதம் தான் - இந்தியா பதிலடி
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை- தோனி..!
மனைவி குடும்பத்தினரால் கௌரவ கொலை செய்யப்பட்ட கணவர்!
கர்நாடக சட்டமன்றத்தில் மூன்று மணி நேரத்தில் நில திருத்த மசோதா உள்ளிட்ட  9 மசோதாக்கள் நிறைவேற்றம்
எஸ்.பி.பி யின் உடல் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.!