இணையத்தில் லீக்கான மாஸ்டர் திரைப்படம்! குற்றவாளி கண்டுபிடிப்பு!

டிஜிட்டல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபர் மாஸ்டர் படத்தை காப்பி செய்து இணையத்தில் கசியவிட்டுள்ளார். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும்,  இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

இன்னும் பொங்கலையொட்டி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படம் இணையத்தில் வெளியானது. இதனால் அதிர்ச்சில் ஆழ்த்த படக்குழுவினர், யார் யாரிடமெல்லாம் படத்தின் காப்பியை கொடுத்தோம் என விசாரிக்க தொடங்கினர்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் காப்பியை, வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக, டிஜிட்டல் நிறுவனம் ஒன்றிடம் கொடுத்துள்ளனர். அந்த டிஜிட்டல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபர், இந்த படத்தை திருட்டுததனமாக பதிவு செய்து, இணையத்தில் கசிய விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அந்த நபர் மீது காவல்துறையில் புகார் அளிக்க, படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், ட்வீட்டர் நிறுவனமும் குற்றவாளியை கண்டுபிடிக்க உதவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.