“இந்திய முஸ்லிம்கள் படுகொலையால் முஸ்லிம்களின் மனங்கள் கவலையடைந்துள்ளது”- ஈரான் மூத்த தலைவர் கண்டனம் ..!

சமீபத்தில் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக  நடந்த பேரணியில்  ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும்  இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது.

இந்த வன்முறையில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையெடுத்து டெல்லி கலவரம் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என  சர்ச்சைக்குரிய வகையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஷெரீப் தனது டுவிட்டரில் பதிவிட்டார்.

பின்னர்  டெல்லியில் உள்ள ஈரான் தூதர் அலி செகனி வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில் ஈரானின் மூத்த தலைவரான அயதுல்லா அலி காமேனி தனது டுவிட்டர் பதிவில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார்.

அதில்  “இந்திய முஸ்லிம்கள் படுகொலையால் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் மனங்கள் கவலையடைந்துள்ளது. இந்திய அரசு இஸ்லாமிய உலகிலிருந்து தனிமைப்படாமல் இருக்க தீவிரப்போக்குள்ள இந்துக்களையும் அவர்களின் கட்சிகளையும் முஸ்லிம் படுகொலைகளையும் முறியடிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார். 

author avatar
murugan