நிம்மதி தரும் நீராடல்…பக்தர்களால் நிறைந்த தெப்பம்..தீர்த்தவாரி கும்பகோணத்தில் வெகுசிறப்பு

கும்பகோணத்தில் மகாமக குளத்தில் வெகுச்சிறப்பாக மாசிமக திருவிழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசி மக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதே போல் இவ்விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகவும்  வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டின்  மாசிமகவிழாவை முன்னிட்டு கடந்த பிப்.28ந்தேதி முதல் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் ஆகிய 6 சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. அதே போல் பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்ப ரேஸ்வரர், நாகேஸ்வரர் ஆகிய 6 சிவன்கோயில்களில் மாசி மகமான நேற்று மட்டும் ஏகதின உற்சவமும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற்றது மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடினர்.தொடர்ந்து பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவமானது நடைபெற்றது.

author avatar
kavitha