ஒலிம்பிக் குத்துச்சண்டை:கொலம்பியாவின் விக்டோரியாவிடம் போராடி தோற்ற மேரிகோம்..!

டோக்கியோவில் இன்று நடைபெற்ற  ஒலிம்பிக் குத்துச்சண்டை மகளிர் 48 – 51 கிலோ எடை பிரிவில் மேரிகோம்,கொலம்பியாவின் விக்டோரியாவிடம் தொல்வியுற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற நடைபெற்ற  மகளிர் குத்துசண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் மேரிகோம், டொமினிகா குடியரசின் மிக்குவேலினாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.இதன்மூலம்,முதல் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மேரிகோம் தகுதி பெற்றார்.

இந்நிலையில்,இன்று நடைபெற்ற 48 – 51 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மேரி கோம்,கொலம்பியாவின் இங்க்ரிட் வாலென்சியா விக்டோரியாவை எதிர்கொண்டார்.இப்போட்டியில்,மேரி கோம் தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தினார்.இருப்பினும்,3-2 என்ற கணக்கில் மேரி கோமை வீழ்த்தி விக்டோரியா வெற்றி பெற்றுள்ளார்.இதனால்,மேரி கோம் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் விக்டோரியா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

ஆனால்,மேரி கோம் கடந்த மே 21 ம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளியை வென்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தேர்வு செய்யப்பட்டார்.மேலும்,மேரி கோம் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.