#BREAKING: மெரினா திறப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவு – தமிழக அரசு..!

மெரினா மீன் அங்காடிகளை முறைபடுத்துவது, சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்குகள் வழக்குகள் விசாரணை கடந்த 11-ம் தேதி   உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது மெரினா திறப்பது குறித்து பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.

அப்போது , நவம்பர் இறுதி வரை மெரினாவை திறக்க வாய்ப்பில்லை என  தமிழக அரசு தெரிவித்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் மெரினா திறப்பது குறித்து சென்னை மாநகராட்சியும், தமிழக அரசு விரைவில்  முடிவு எடுக்கவேண்டும்.

மேலும், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்..? திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையை திறப்பதில் என்ன சிரமம்..? என கேள்வி எழுப்பியது.  இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை நவம்பர் 18-ம் தேதி அதாவது இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  மெரினா கடற்கரை திறப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மெரினா கடற்கரையை திறப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்பட விட்டால் நீதிமன்றமே திறக்க நேரிடும் என கூறியது.

மெரினாவில் தள்ளுவண்டிகள் டெண்டர்கள் அமைப்பது குறித்த நடவடிக்கைகளில் தலைமை நீதிபதி தடை விதித்திருந்தார். அந்தத் தடையை விலக்கிக் கொண்ட நீதிமன்றம் அந்த டெண்டரில் 900  தள்ளுவண்டிகளை அமைப்பது தொடர்பான  நடவடிக்கை தொடரலாம் எனவும் வழக்கை டிசம்பர் 03-ஆம் தேதி ஒத்திவைத்தது.

author avatar
murugan

Leave a Comment