மண்டல பூஜைக்கு தயாராகும் சபரிமலை.! மீண்டும் எப்போது நடை திறப்பு.?

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்த்ர்கள் கூட்டம் எந்த வருடத்தை காட்டிலும், இந்த வருடம் அதிகமாக உள்ளது.  இந்த வருடம் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் (நவமபர்) 16ஆம் தேதி மாலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டது. நவம்பர் 17, கார்த்திகை 1ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அன்றிலிருந்து சரியாக 41 நாள் ஒரு மண்டலம் கழித்து நாளை (டிசம்பர் 27) மார்கழி மாதம் 11ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும்.

மண்டல பூஜை நிகழ்வு நாளை நடைபெறுவதை ஒட்டி, நாளை அனுமதி பெரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சுமார் 80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரையிலான பக்தர்கள் தினசரி அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், நாளை 70 ஆயிரம் முக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது – சுகாதாரத்துறை அமைச்சர்.!

நாளை மண்டல பூஜை நடைபெறுவதை ஒட்டி, இன்று திருவிதாங்கூர் மகாராஜா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தானமாக அளித்த 450 சவரன் எடையுள்ள தங்க அங்கி மலை பாதை வழியாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தங்க அங்கியனது 1973ஆம் ஆண்டு தனமாக  வழங்கப்பட்டது.

இன்று மாலை 5.30 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தங்க அங்கியானது கொண்டுவரப்படும். அதற்காக இன்று பிற்பகல் முதலே மலை பாதை முழுவதும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இன்று மாலை 6.30 மணிக்கு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு 11 மணி வரை பூஜைகள் நடைபெற்ற பின்னர் நடை சாத்தப்படும்.

அதற்குப்பிறகு நாளை காலை வழக்கம் போல காலை 3 மணிக்கு தரிசனதிற்காக நடைதிறக்கப்படும். பின்னர் 12.30 மணிக்கு மண்டல பூஜை தொடங்கப்படும். அதன் பிறகு 1.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்டும்.பிற்பகல் 3 மணி முதல் இரவு 11.30 மணி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர்.

நாளை இரவு 11.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் மகர விளக்க பூஜைக்காக ஜனவரி 30 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும். ஜனவரி 15 ஆம் தேதி, தை 1ஆம் நாள் மகர விளக்கு ஜோதி பொன்னம்பலமேட்டில் ஏற்றப்படும். பக்தர்கள் வருகையை சபரிமலை ஐயப்பன் ஒளி வடிவில் பக்தர்களை காண்பதாக ஐதீகம். அதுக்கடுத்து ஜனவரி 20 ஆம் தேதி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு அன்று இரவு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்படும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.