கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது – சுகாதாரத்துறை அமைச்சர்.!

கடந்த சில மாதங்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனாவின் மற்றொரு திரிபான ஓமிக்கிரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த புதிய திரிபானது வயதானவர்களுக்கும், வேறு நோய் தொற்றுகள் உள்ளவர்களுக்கும் சிக்கலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு, ஒரே நாளில் 752ஆக அதிகரித்துள்ளது.

அதில், கேரளாவில் அதிகபட்சமாக 265 பேர் கொரோனாவால் நேற்று மட்டும் பாதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2606ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வரிப்பகிர்வு விடுவிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.2,976 கோடி…உபிக்கு ரூ.13,088.51 கோடி!

கேரளாவில் சமீப காலமாக JN1 எனப்படும் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. நேற்று மட்டும் 265 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கேரளாவில் அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது, விரைவில் கொரோனா எண்ணிக்கை குறையும் என வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.