” லட்சம் வாங்கினால் தூக்கு ” மதுரை நீதிமன்றம் எச்சரிக்கை…!!

  • மின் வாரிய உதவி பொறியாளர்கள் தேர்வு நடைபெற்ற சமயத்தில் விடைத்தாள் வெளியானது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது 
  • லட்சகம் வாங்கினால் அவர்களை தூக்கிலிட வேண்டுமென்று மதுரை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின் வாரிய உதவி பொறியாளர்கள் தேர்வு நடைபெற்ற சமயத்தில் விடைத்தாள் வெளியானது.இதையடுத்து முழுமையான விசாரணை நடத்தாமல் பணி நியமன ஆணைகளை வழங்குவதும் எதிராக மதுரையை சேர்ந்த பரணிபாதிரி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மின் வாரிய உதவி பொறியாளர்கள் தேர்வு நடைபெற்றக் கொண்டு இருக்கும் போது வினாத்தாள் எப்படி வெளியாகியது என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.   தமிழகத்தில் அனைத்துத்துறைகளிலும் லட்சம் தலைவிரித்தாடுகின்றது. லட்சம் ஒழிய வேண்டுமென்றால் லட்சம் வாங்குபவரை தூக்கிலிட வேண்டும்.அவர்கள் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யவேண்டும்.அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும்.அப்போது தான் லஞ்சம் வாங்குவது இயல்பானது என்பதை மற்ற முடியும் என்று கூறி இந்த வழக்கை  மார்ச் 1ஆம் தேதி_க்கு ஒத்திவைத்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment