விஜய் தேவரகொண்டாவிற்கு சென்னையில் இவ்வளவு மவுசா?! வசூல் மழையில் கீதா கோவிந்தம்!!

நல்லபடங்கள், நல்ல கதைகளத்துடன் எந்த மொழியில் வெளிவந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் அதனை கொண்டாட தவறியதில்லை. அப்படிதான் சில வருடங்களுக்கு முன்னர் நிவின்பாலி நடித்த ‘பிரேமம்‘ திரைப்படம் சென்னையில் 1வருடம் ஓடி சாதனை பரிந்தது.
அதேபோல தற்போதும் தெலுங்கில் ‘அர்ஜூன் ரெட்டி‘ திரைப்படம் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் தெலுங்கு மொழியிலேயே வெளியாகி சென்னையில் மட்டும் 1 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது.
அதே போல தமிழ் மொழிபடங்களான நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம் 3.80 கோடி வசூல் செய்துள்ளது.
ஒன்றாக வெளியான விஸ்வரூபம் மற்றும் பியார் பிரேமா காதல் திரைபடங்கள் முறையே 4.78 மற்றும் 2.23 கோடிகள் வசூல் செய்துள்ளது.
இவை அனைத்தும் சென்னை மாநகரின் கணக்கெடுப்பு  மட்டுமே.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment