செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடையாது.! 3 மாதத்தில் வழக்கை முடிக்க உத்தரவு.!

Senthil Balaji : தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால்இந்த கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக அமலாக்கத்துறை விசாரணை வட்டத்தில் நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி உள்ளார்.

அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கானது எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பல்வேறு முறை உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரியுள்ளது .

ReadMore – குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி..!

இதுவரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்வு நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பல்வேறு முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து அவை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு முன்னதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது .

Read More – நிறைவேறாத கனவு… ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி சாந்தன் சென்னையில் காலமானார்.!

இந்த ஜாமீன் மனுவானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என கூறி ஜமீனை வழங்க மறுத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் முதன்மை அமர்வு நீதிமன்றம் தினசரி விசாரணை அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வழக்கை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment