கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் –மத்தியபிரதேச முதல்வர்

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெரும் கொரோனா நோயாளிகளின் செலவை அரசே ஏற்கும் என மத்தியபிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌவ்ஹான் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர், அதில் முதன்மையாக அவர்களின் வாழ்வாதாரம் மோசமான நிலையில் உள்ளது, இதனால் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர், இந்த சூழலில் மக்களுக்கு உதவும் பொருட்டு மத்திய பிரதேச அரசு ஓரு திட்டத்தை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் மத்தியபிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌவ்ஹான் கூறுகையில்  ஆயுஸ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வ-ரும் கொரோனா நோயாளிகளின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்றும், அதில் சிடி ஸ்கேன், மற்றும் ரெமிடிசிவர் தடுப்பூசி , பிற மருந்துகள், ரூம் வாடகை உணவு போன்றவைகளின் செலவுகள் அடங்கும் என்றும், மேலும் 2.42 கோடி ஆயுஸ்மான் பாரத் யோஜனா அட்டை வைத்திருப்போருக்க செலவிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதன்மூலம் மாநிலத்தில் 88 சதவீத மக்கள் நேரடியாக பயனடைவார்கள், மேலும் இந்த திட்டத்தின் மூலம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற மாநில அரசால் ரூ.5000 தொகையை முன்பனமாக செலுத்தப்படும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் ஆயுஸ்மான் பாரத் யோஜனா அட்டை வைத்திருந்தாலும் மற்றொருவர் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.