#BREAKING: மதனின் யூடியூப் சேனல்கள் முடக்கம்..!

யூடியூபர் பப்ஜி மதனுக்கு ஜூலை 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பப்ஜி கேம் விளையாடும் போது சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு வருவதாக யூடியூபர் பப்ஜி மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பப்ஜி மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், மதன் விசாரணைக்கு ஆஜரகாமல் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து, யூ டியூபர் பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், தர்மபுரியில் நேற்று பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு இன்றைய தினமே இரவு சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகம் கொண்டு வரப்ப்பட்டு இரவு முழுவதும் தீவிர விசாரணை நடைபெற்றது.

இதைதொடர்ந்து, நேற்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் பப்ஜி மதன் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், பப்ஜி மதனை ஜூலை 3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பப்ஜி மதனின் யூடியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்திருந்தனர். மேலும், யூடியூப் நிறுவனத்திற்கு மதனின் யூடியூப் சேனல்களை முடக்குவதற்கான பரிந்துரைக் கடிதத்தை சைபர் கிரைம் போலீசார் அனுப்பி இருந்தனர். இந்நிலையில், மொத்தம் யூடியூபர் மதன் 3 யூடியூப் சேனலில் நடத்தி வந்துள்ளார்.

அதில் இரண்டு யூடியூப் சேனல்கள் முடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சேனலில் ஆபாசமான பேச்சுகள் ஏதும் இல்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சேனலையும் முடக்குவதற்கான நடவடிக்கைகளை சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan