அரசியல் வாரிசு போட்டியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள லூசிஃபர் ! எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா?

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சூப்பர்ஸ்டார் மோகன்லால். இவர் பல படங்களை இயற்றியுள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ‘லூசிஃபர்’. இப்படம் மலையாளத்தில், அரசியல் வாரிசு போட்டியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படம் வெளியாகி சூப் ஹிட் அடித்துள்ளதுள்ளது. மேலும், இது பல கோடிகளை வசூல் செய்துள்ளது.

இதனையடுத்து, இந்த படம் , தமிழில் டப்பிங் செய்யப்பட்டு, வரும் மே 3-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment