இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு!

இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய அரசு தளர்வுகளுடனான ஊரடங்கை ஜனவரி 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

அதன்படி,  கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் முழு ஊரடங்கு தொடரப்படும் எனவும், கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.