ஆருத்ரா தரிசனம் – முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.!

ஆருத்ரா தரிசனம் – முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.!

ஆருத்ரா தரிசனத்திற்கு பிற மாவட்ட பக்தர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மார்கழி மாத திருவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மார்கழி மாத திருவிழா முன்னிட்டு ஆருத்ரா தரிசன விழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, காலை மற்றும் இரவு பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது.

நாளை தேரோட்டமும் 30ஆம் தேதியன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெறவுள்ளது. புதன்கிழமை அதிகாலை 3மணி முதல் 6 மணி வரை மார்கழி மகாதிருமஞ்சனமும் காலை 10 மணிக்கு மேல் இராஜசபையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவிற்கு முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆருத்ரா தரிசனத்திற்கு பிற மாவட்ட பக்தர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை நடைபெறவுள்ள தேர் திருவிழாவில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள் http://aruthracarfest.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் நாளை மறுநாள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் நடைபெற இருக்கும் தரிசனத்தில் பங்குபெற விரும்பும் பக்தர்கள் http://aruthraonline.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube