உள்ளூர் போட்டி: சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளுக்கு பரிசுத்தொகை உயர்வு – பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தற்போது பரிசுத்தொகை உயர்த்தி அறிவிப்பு.

ரஞ்சி கோப்பை, இரானி கோப்பை மற்றும் துலீப் கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளுக்கு பரிசுத்தொகையை உயர்த்தி இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

பரிசுத்தொகை உயர்வு:

2023-24 சீசனுக்காக உள்ளூர் போட்டிகள் குறித்த அறிவிப்பை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது.  இந்த நிலையில், உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளுக்கு பரிசுத்தொகையை உயர்த்தி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

ரஞ்சி கோப்பை பரிசுத்தொகை:

கடந்த காலங்களில் 2022-23 சீசன் வரை ரஞ்சி கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.2 கோடி, இரண்டாவது இடத்துக்கு ரூ.1 கோடி மற்றும் அரை இறுதி போட்டிக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. தற்போது 2023-23 சீசன் முதல் ரஞ்சி கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.5 கோடியும், இரண்டாவது இடத்துக்கு ரூ.3 கோடியும், அரை இறுதிக்கு ரூ.1 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரானி கோப்பை – விஜய் ஹசாரே கோப்பை:

இதுபோன்று, இரானி கோப்பைக்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 2023-23 சீசன் முதல் இரானி கோப்பைக்கு ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட உள்ளது. துலீப் கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பைக்குக்கு பரிசுத்தொகை முதல் இடத்துக்கு ரூ.1 கோடியும், இரண்டாவது இடத்துக்கு ரூ.50 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தியோதர் கோப்பைக்கு ரூ.40 லட்சமும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட உள்ளது.

சையது முஷ்டாக் அலி – மகளிர் கிரிக்கெட்:

சையது முஷ்டாக் அலி தொடரில் சாம்பியன் பட்டம் வெள்ளி அணிக்கு ரூ.80 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்ட்டுள்ளது. இத்தொடரில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.40 லட்சம் வழங்கப்படும். அதேபோல், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு ரூ.50 லட்சமும், இரண்டாவது பரிசு ரூ.25 லட்சமும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. மேலும், மகளிர் டி-20 கோப்பைக்கு முதல் பரிசு ரூ.40 லட்சமும், 2வது பரிசு ரூ.20 லட்சமும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment