தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.182 கோடிக்கு மது விற்பனை.!

தமிழகத்தில் நேற்று மட்டும் ரூ.182.90 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 31-ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஜூலை மாத 4 நான்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தனர்.

இதன் காரணமாக அனைத்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று முழு ஊரடங்கு காரணமாக  மது கடைகள் மூடப்படும் என்பதால், நேற்று மது பிரியர்கள் மது வாங்க மது கடைகளில் குவித்தனர்.

தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் ரூ.182.90 கோடிக்கு  மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதில், மதுரை மண்டலத்தில் 42.1 கோடியும், திருச்சி மண்டலத்தில் 41.3 கோடியும், சேலம் மண்டலத்தில் 40. 4 கோடியும், கோவை மண்டலத்தில் 37.9 கோடியும், சென்னை மண்டலத்தில் 21.2 கோடியும் வசூல் ஆகியுள்ளது.

author avatar
murugan